தங்கள் பகுதிக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை, ஏரியல் இறங்கி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.
காவிரியில் கரைபுரண்டு தண்ணீர் ஓடியும் தங்கள் பகுதிக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை என ஏரியல் இறங்கி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே பாளையப்பட்டி கிராமத்தில் குடிக்க கூட தண்ணீர் இல்லாத நிலையில், பல்வேறு நீர் நிலைகளும் வறண்டு கிடக்கும் சூழ்நிலை காணப்படுகிறது. ஜீன் 12ம் தேதி தண்ணீர் திறந்தும் இன்னும் எங்கள் பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை,
கொள்ளிடத்தில் உபரி நீர் திறந்து விடப்பட்டு கடலில் வீணாக கலக்கிறது. ஆனால், கல்லணையில் இருந்து வெறும் 20 கிலோமீட்டர் தூரம் உள்ள எங்கள் பகுதி வறண்ட நிலையில் காணப்படுகிறது. எனவே எங்கள் பகுதிக்கு கிளை வாய்கால்களை உருவாக்கிட வேண்டும் அல்லது நீர் இறைப்பு பாசன திட்டத்தை உருவாக்கிட வேண்டும் என வலியுறுத்தி,
அப்பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் நீர் நிலைகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும், குடி தண்ணீர் மற்றும் சாகுபடிக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாளைப்பட்டி தடுப்பு ஏரியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.