சூர்யாவின் கருப்பு படத்தின் டிரெய்லர் வெளியானது
Watch – YouTube Click ![]()
சூர்யாவின் கருப்பு படத்தின் டிரெய்லர் வெளியீட்டிற்கு முன்னதாக, தயாரிப்பாளர்கள் சூர்யாவின் கதாபாத்திரத்தின் First லுக் போஸ்டரை வெளியிட்டனர்.
சூர்யாவின் 45வது படமான கருப்பு படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ளார்.
இந்த போஸ்டரில் சூர்யா கருப்பு சட்டை மற்றும் வேஷ்டி அணிந்து, சுருட்டு புகைத்துக்கொண்டு, ஒரு திருவிழாவின் வழியாக நடந்து செல்வது போல் காட்டப்பட்டுள்ளது.
படத்தின் போஸ்டரில் டிரெய்லர் ஜூலை 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி கருப்பு படத்தின் டீசர், சூர்யா..வின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டது.
கருப்பு ஒரு ஆக்ஷன் படம் என்று கூறப்படுகிறது. டீசரில் சூர்யா குல தெய்வமான அய்யனாரின் பக்தராக கிராமிய தோற்றத்தில் காட்டப்படுகிறார்.
படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கிறார் ஒருவர் கருப்பு மற்றோருவர் வழக்கறிஞராக நடிக்கிறார்,.. R.J. Balaji வில்லனாக நடிக்கிறார்.
இந்த படம் சூர்யாவின் வேல், சிங்கம் மற்றும் எதர்க்கும் துணிந்தவன் போன்ற பிற படங்களின் பாணியில் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்திருகின்றனர்.
கருப்பு படத்தில் த்ரிஷா, நட்டி, அனகா மாயா ரவி, இந்திரன், ஸ்வாசிகா மற்றும் ஷிவதா இவர்களுடன் விமர்சகர் கோடாங்கியும் நடித்துள்ளார்.


