தமிழக சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த தமிழக நாயுடு கூட்டமைப்பு.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அண்ணா பேருந்து நிலையம் அருகே தமிழக நாயுடு கூட்டமைப்பு ஆண்டு விழா நடைபெற்றது.
இந்த ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மாநில பொதுச் செயலாளர் ரெங்கராஜ் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
மேலும் அவர் விழாவில் பேசுகையில் தமிழ் தேசியம் பேசும் கட்சிகள் கூறுவது போல தமிழகத்தின் வந்தேரிகள் அல்ல நாங்கள் தமிழகத்தின் பூர்வ குடிகள் நாங்கள் தான் என விஜயநகர அரசுகளை கோடிட்டு காட்டி பேசினார்.
நாங்கள் தான் தமிழ் தோன்றல்கள் என்றும் சில பிரிவினைவாத சக்திகள் எங்களை பிரித்து வைத்து எங்களின் வாழ்வாதாரத்தினை நசுக்குகின்றன என ஆவேசபட்டார்.

மேலும் எங்களுக்கு உள் இட ஒதுக்கீடு வேண்டும் என்றும் தமிழகத்தில் தெலுங்கு பேசுபவர்கள் ஒன்றரை கோடி பேர் இருக்கிறோம் என்றும் எங்களை தவிர்த்துவிட்டு இங்கு யாரும் ஆட்சி அமைத்து விட முடியாது எனவும் பேசினார்.
பின்னர் இந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக கூட்டமைப்பு தனித்து போட்டியிடும் எனவும் அதற்க்கான வேட்பாளர்களை அறிவித்தார்.
மேலும் தமிழக நாயுடு கூட்டமைப்பு மாவட்ட துணை தலைவர் எம்.கே.மணிகண்டன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட தலைவர் ரவி வரவேற்ப்பு நிகழ்த்த மாவட்ட செயலாளர் விடிபி.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.
இந்த விழாவில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

