in

காஜல் அகர்வால் குறித்த புரளி பொய்யானது


Watch – YouTube Click

காஜல் அகர்வால் குறித்த புரளி பொய்யானது

 

பிரபல தென்னிந்திய நடிகை காஜல் அகர்வால் இறந்து விட்டதாக அதிர்ச்சியூட்டும் வதந்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அவர் சாலை விபத்தில் இறந்துவிட்டதாக பொய்யான தகவல்கள் பரவி அவரது ரசிகர்களிடையே கலகத்தை ஏற்படுத்திய நிலையில் காஜல் அகர்வால் தற்போது இந்த வதந்திகளுக்கு பதிலளித்து, தான் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

காஜல் தனது இன்ஸ்டாகிராம் பதிவில்., “நான் ஒரு விபத்தில் சிக்கி இந்த உலகில் இல்லை என்று சில தவறான தகவல்கள் பரவி வருகின்றன, இது முற்றிலும் பொய்யானது, வேடிக்கையானது.”.

“கடவுளின் அருளால், நான் நலமாக இருக்கிறேன், பாதுகாப்பாக இருக்கிறேன்,. இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

உண்மை மற்றும் நேர்மறையில் கவனம் செலுத்துவோம்.” என்று பதிவிட்டுள்ளார்.

காஜல் அகர்வால் சமீபத்தில் தனது கணவர் கவுதம் கிட்ச்லுவுடன் மாலத்தீவிற்கு சென்ற புகைபடங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார், என்பது குறிப்பிடதக்கது.

காஜல் அகர்வால் இயக்குனர் நிதேஷ் திவாரியின் ‘ராமாயணம்’ படத்தில் விரைவில் நடிக்கவுள்ளார், அப்படத்தில் ராவணனின் மனைவியான மண்டோதரி வேடத்தில் நடிக்கவுள்ளார்.

What do you think?

செல்பேசியை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்தும் குழந்தைகளுக்கு மனநல பிரச்சனை ஏற்படும்

இசையமைப்பாளரை கரம் பிடித்த நடிகை கிரேஸ் ஆண்டனி