in

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருத்தேரோட்டத்திற்கு முகூர்த்த கால் நடப்பட்டது

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருத்தேரோட்டத்திற்கு முகூர்த்த கால் நடப்பட்டது….

 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருத்தேரோட்டத்திற்கு இன்று தேரில் முகூர்த்த கால் நடப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலானது 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இக்கோவிலில் பங்குனி உத்திரம் அன்று நடைபெறும் திருக்கல்யாணம், மார்கழி நீராட்டு உற்சவம், ஸ்ரீ ஆண்டாள் பிறந்த தினமாகிய திருவாடிப்பூர தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் விமர்சியாக கொண்டாடப்படும்.

இந்த வருடத்திற்கான ஆடிப்பூர திருத்தேரோட்டத்திற்கு பூர்வாங்க பணியான முகூர்த்தக்கால் எனப்படும் தேருக்கு நாள் செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

காலையில் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்க மன்னார் எழுந்தருளும் திருத்தேரில் வேத மந்திரங்கள் முழங்க பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் முகூர்த்தக்கால் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து ஆண்டாள் கோவில் முன்பு ஆடிப்பூர கொட்டகை அமைப்பதற்கான முகூர்த்த கால் ஊன்றப்பட்டது. இந்நிகழ்வை தொடர்ந்து திருத்தேரோட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டது. வரும் ஜூலை 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆடிப்பூர விழா துவங்குகிறது.

 

9 ஆம் திருநாளான 28ஆம் தேதி திருடிப்பூர தேரோட்டம் நடைபெற உள்ளது. இன்று முகூர்த்தக்கால் நட்டப்படுவதையோட்டி முன்னதாக ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னாருக்கு காலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

What do you think?

சேத்தியாதோப்பு அருகே மூன்று கோவில்களின் மகா கும்பாபிஷேகம்

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு செஞ்சி வாரச்சந்தையில் ரூ 4 கோடிக்கு ஆடுகள்  விற்பணை அமோகம்…