in

கும்பகோணத்தில் கெளரவ விரிவுரையாளர்கள் 11 நாளாக காத்திருப்பு போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் மாணவிகள் ஆதரவு தெரிவித்தனர்.

கும்பகோணத்தில் கெளரவ விரிவுரையாளர்கள் 11 நாளாக காத்திருப்பு போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் மாணவிகள் ஆதரவு தெரிவித்தனர்.

கும்பகோணத்தில் நீண்ட நாட்களாக பணிபுரியும் தங்களை அரசுப் பணியாளர்களாக மாற்ற வேண்டும். பல்கலைக்கழகம் மானிய குழு நிர்ணயித்த ஊதியத்தை 57,800 வழங்க வேண்டும்.

  11 மாதங்கள் மட்டுமே வழங்கப்படும் ஊதியத்தை 12 மாதங்களாக மாற்ற வேண்டும், தற்காலிக பணி நீக்கத்தை தவிர்க்க வேண்டும். உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 11 நாள்களாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மகளிர் கல்லூரியில் 11 வது நாளாக காத்திருப்பு போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கம் மாணவிகள் ஆதரவு தெரிவித்து மாணவிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்‌.

இதில் கெளரவ விரிவுரையாளர்கள் பொறுப்பாளர்கள் மகேஸ்வரி, மங்களம் ஆகியோர் தலைமையில் 100க்கு மேற்பட்ட கெளரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

புனித ரமலான் மாதம் துவங்கியதை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை

‘சிறகடிக்க ஆசை’ சீரியல்ல இப்போ விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்ல