in

புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர், ஆணையர் இன்று ஆய்வு செய்தனர்

புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர், ஆணையர் இன்று ஆய்வு செய்தனர்

 

மாநகராட்சி சார்பில் 6.50 கோடி மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர், ஆணையர் இன்று ஆய்வு செய்தனர்.

தஞ்சாவூர் கோடியம்மன் கோவில் அருகே சுங்காதிடல் பகுதியில் சாலை குண்டு குழியுமாக சேதமடைந்து காட்சியளித்தது.

பிற மாவட்டங்களில் இருந்து தஞ்சாவூரை இணைக்கும் பிரதான சாலையாக உள்ள இதனை சீரமைத்து புதிய தார் சாலை அமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து மாநகராட்சி சார்பில் புதிய தார்சாலை அமைக்க ரூ.6.50 கோடி மற்றும் சாலையின் இருபுறமும் மின்விளக்குகள் அமைக்க ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணியை மாநகராட்சி மேயர் ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தார் சாலையை தரமாகவும் விரைவாகவும் முடிக்க வேண்டும் .

குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு சாலையில் எந்த பிரச்சனையும் வராத அளவுக்கு தரமாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

What do you think?

தரங்கம்பாடியில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வரலாற்று சாதனை விற்பனையில் பழனி தேவஸ்தான பஞ்சாமிர்தம்