மலேசியாவில் கர்ஜித்த தளபதி! “சினிமாவையே விட்டுக்கொடுக்கிறேன்!” ‘ஜனநாயகன்’ ஆடியோ லான்ச் அதிரடி!
மலேசியாவோட கோலாலம்பூர்ல இருக்குற புகித் ஜலில் மைதானத்துல நேத்து நடந்த ‘ஜனநாயகன்’ ஆடியோ லான்ச், ஒரு இசை வெளியீட்டு விழா மாதிரி இல்லாம ஒரு பெரிய திருவிழா மாதிரியே நடந்து முடிஞ்சிருக்கு!
சாயங்காலம் 6 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய விழாவுக்கு, மதியமே ரசிகர்கள் மைதானத்துல குவிய ஆரம்பிச்சுட்டாங்க.
சுமார் 80 ஆயிரம் பேர் முன்னாடி நம்ம தளபதி ‘ரேம்ப் வாக்’ வந்து கையசைச்சப்போ ஸ்டேடியமே அதிருச்சு.விஜய் மேடைக்கு வர்றதுக்கு முன்னாடி எஸ்பிபி சரண், விஜய் யேசுதாஸ், அனுராதா ஸ்ரீராம்னு பெரிய பாடகர் பட்டாளமே சேர்ந்து பழைய சூப்பர் ஹிட் பாட்டுங்களை பாடி ரசிகர்களை குஷிப்படுத்தினாங்க.
விஜய்க்கு மாஸ் ஹிட் கொடுத்த இயக்குநர்கள் அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் மூணு பேரும் ஒண்ணா மேடையில நின்னது ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டா இருந்துச்சு.
அனிருத், பூஜா ஹெக்டே, பிரியாமணினு படக்குழுவே அங்கதான் இருந்துச்சு.வழக்கம் போல தளபதி மைக் புடிச்சதும் ஸ்டேடியம் அமைதியாச்சு. அவர் பேசின சில முக்கியமான விஷயங்கள் இதோ:
“சும்மா மணல் வீடு கட்டலாம்னு தான் சினிமாவுக்கு வந்தேன், ஆனா நீங்க எனக்கு அரண்மனையே கட்டிக்கொடுத்திருக்கீங்க. 33 வருஷமா என் கூட நிக்குறீங்க.”
“எனக்காக எவ்வளவோ பண்ண ரசிகர்களுக்காக, நான் நேசிக்கிற சினிமாவையே உங்களுக்காக (அரசியலுக்காக) விட்டுக்கொடுக்கிறேன். இந்த விஜய் சும்மா ‘நன்றி’ சொல்லிட்டு போகமாட்டான், உங்க நன்றிக்கடனைத் தீர்த்துட்டுதான் போவான்.”எதிராளி அவசியம்:
“ஜெயிக்கிறதுக்கு நண்பர்கள் கூட தேவையில்லை, ஆனா ஒரு வலிமையான எதிராளி கண்டிப்பா வேணும். அப்போதான் நாம இன்னும் ஸ்ட்ராங் ஆக முடியும்.” “அனிருத் ஒரு மியூசிகல் டிபார்ட்மென்டல் ஸ்டோர் மாதிரி. உள்ள போனா நமக்கு என்ன வேணுமோ அதை எடுத்துக்கலாம்.
என்னை அவர் ஏமாத்துனதே இல்லை.”விஜய் தனியா வருவாரா? இல்ல கூட்டணியோட வருவாரா? அப்படின்னு கேக்குறவங்களுக்கு, “33 வருஷமா நாம ஒரு அணியா தான வந்துட்டு இருக்கோம்…
சஸ்பென்ஸ்ல தான் சுவாரஸ்யம் இருக்கும்”னு ஒரு போடு போட்டாரு. கடைசியா பேசும்போது, “2026-ல வரலாறு திரும்பப்போகுது, அதுக்கு தயாரா இருங்க” அப்படின்னு சொல்லி அரசியல்ல ஒரு பெரிய எதிர்பார்ப்பை கிளப்பிட்டு கிளம்புனாரு.மலேசியாவே ‘ஜனநாயகன்’ மழையில நனைஞ்சிருச்சு!


