தேரடியில் கண்ணாடி பல்லக்கில் உம்மை பூ போடும் வைபவம்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை பாலைவனநாத சுவாமி திருக்கோவிலில் சித்திரை சப்தஸ்தான திருவிழாவில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி ……
திரளான பக்தர்கள் பங்கேற்பு ….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை தவள வெண்ணகையாள் பாலைவனநாத சுவாமி திருக்கோவிலில் சித்திரை சப்தஸ்தான திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
அது சமயம் திருப்பாலைத்துறை பாபநாசம் பகுதிகளில் பாலைவனநாத சுவாமி திருக்கோவிலிருந்து சப்தஸ்தான பல்லக்கு திருக்கோவில் வழக்கப்படி வீதி உலாக் காட்சி நடைபெற்றது.
மாலையில் பாபநாசம் சீனிவாச பெருமாள் திருக்கோவில் அருகில் அமைந்துள்ள தேரடியில் கண்ணாடி பல்லக்கில் உம்மை பூ போடும் வைபவம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
விழாவில் கோவில் செயல் அலுவலர் விக்னேஷ், ஆய்வாளர் லெட்சுமி ,அறங்காவலர் குழு தலைவர் கணேசன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வசந்தி சரவணன், ராஜேந்திரன் திருப்பாலைத்துறை சிவப்பேரவை பக்தர்கள் கிராமவாசிகள் என திரளானோர் கலந்து கொண்டனர் .