in

ரிஷப் ஷெட்டி மற்றும் பட குழுவினர் சென்ற படகு கவிழ்ந்து….மீண்டும் காந்தாரா 2’ படபிடிப்பில் விபத்து


Watch – YouTube Click

ரிஷப் ஷெட்டி மற்றும் பட குழுவினர் சென்ற படகு கவிழ்ந்து….மீண்டும் காந்தாரா 2’ படபிடிப்பில் விபத்து

காந்தாரா’ படத்தின் தொடர்ச்சியான ‘காந்தாரா 2’ விரைவில் வெளியாக உள்ளது. படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது, ஆனால் படப்பிடிப்பு தளத்தில் தினமும் விபத்துகள் நடந்து வருகின்றன. சூட்டிங் தொடங்கும் பொழுது வேன் கவர்ந்து அதிர்ஷ்டவசமாக பட குழுவினர் உயிர் தப்பினர் .கர்நாடகாவில் சூட்டிங் நடக்கும்போது நடிகர் கபில் நதியில் மூழ்கி மரணமடைந்தார் . அதன் பிறகு ராகேஷ் புஜாரி என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் சமீபத்தில் நடிகர் விஜூ விகே ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தார் .

சில நாட்களுக்கு முன்பு, 30 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது.இப்படி அடுக்கடுக்காக மரணங்கள் காந்தாரப் படப்பிடிப்பில் நடந்து திகிலை ஏற்படுத்தி வரும் நிலையில், மீண்டும், காந்தாரா 2 படப்பிடிப்பின் போது ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது; 30 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து, உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. நடிகர் ரிஷப் ஷெட்டியும் படகில் இருந்தார். சிவமோகா மாவட்டம் மஸ்தி கட்டே பகுதியில் உள்ள மணி நீர்த்தேக்கத்தில் ‘காந்தாரா 2’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

படகில் இருந்த ரிஷப் ஷெட்டி உட்பட 30 பேர் தண்ணீரில் விழுந்த காட்சி படமாக்கப்பட்ட போது படகு திடீரென கவிழ்ந்தது. இருப்பினும், அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர், யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. நடிகர் குழுவினர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.. படகு கவிழ்ந்த சம்பவத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருந்தபோதிலும், விலையுயர்ந்த கேமரா உபகரணங்கள் மற்றும் பிற படப்பிடிப்பு உபகரணங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. காந்தாரா 2 படத்தின் வெளியீட்டைப் பொறுத்தவரை, ஷெட்டியின் படம் அக்டோபர் 2, 2025 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடந்தால், படத்தின் வெளியீடு தாமதமாகலாம்.

What do you think?

தந்தை பற்றி உருகமாக பதிவிட்ட ஆர்த்தி

சினிமாவில் அறிமுகமாகும் பார்த்திபன் மகன்