in

 தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

 தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

 

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் 18 நாட்கள் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டு கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது.

விழாவினை முன்னிட்டு தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

மேளதாளத்துடன் – சிவகணங்கள் இசைக்க அம்பாளுடன் சந்திரசேகர் சுவாமிகள் எழுந்தருளி இராஜ வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த தேர்த்திருவிழாவில் தஞ்சாவூர் மட்டுமில்லாமல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் திருவிழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேரோட்டத்தை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவ துறை – தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

What do you think?

குத்தாலம் மகா காளியம்மன் திருநடன உற்சவம் 

திருவிடைக்கழி முருகன் ஆலயம் செவ்வரளி மாலை சூடி முருகன் சிறப்பு அலங்காரம்