நாமக்கல் காந்தமலை முருகன் ஆலயத்தில் தைப்பூச தேர் திருவிழா
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் சிறிய குன்றின் மேல் உள்ள அருள்மிகு காந்தமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் உள்ள முருகப்பெருமான் பக்தர்களுக்கு மேற்கு நோக்கி நின்றவாரு அருள்புரிந்து வருகிறார் .

தைப்பூச விழாவை முன்னிட்டுதினத்தை முன்னிட்டு இன்று காலை மோகனூர் காவிரியாற்றில்உற்சவ முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபம் காண்பிக்கப்பட்டது .பின்னர் காலை 10:30 மணிக்கு மேல் 11 மணிக்குள் மீன லக்னத்தில் முருகப்பெருமான் திருத்தேர் ஏற்றம் மிக விமர்சையாக நடைபெற்றது .
பின்னர் மாலை 5 மணிக்கு மேல் திருதேரோட்டம் தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்வில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பி. இராமலிங்கம் கலந்து கொண்டு திருத்தேரணை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார் .
அப்போது முதலாவதாக விநாயகப் பெருமான் தேரும்இரண்டாவதாக முருகப்பெருமான் தீரும் மகா தீபாரனை காண்பிக்கப்பட்ட பின் திருக்கோவில் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இதில் ஏராளாமான பக்தர்கள் தரிசனம் பெற்று சென்றனர், இதில் காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து வழிபாடு செய்தனர் வருகை புரிந்தவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


