தமிழக வெற்றி கழக ஆலோசனை கூட்டம்.
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாபநாசம் சட்டமன்ற பொறுப்பாளர் அசாரூதீன் உதுமான் அலி தலைமையில் நடைபெற்றது.
இதில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் நிஜாம் அலி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி விஜய் 51-வது பிறந்த நாளை முன்னிட்டு, வருகிற 22.06.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வெகு விமர்சியாக கொண்டாடுவது எனவும், ஜூன் 22 முதல் தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்குவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட தொழிலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணைச் செயலாளர்கள் வெங்கடேசன், ரம்யா, பாபநாசம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் வினோத், சசி, சுதாகர், நகரச் செயலாளர்கள் உதயசூர்யா, வெங்கடேசன், சுடலை முத்து, கணேஷ் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் சார்பு பணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.