தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் புதிய வீடு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை குத்தாலம், மணல்மேடு பகுதிகளில் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனை பகுதியில் நகர பொறுப்பாளர் ராஜ்குமார் தலைமையில் மாவட்ட செயலாளர் குட்டிகோபி ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இது போல் ஸ்ரீகண்டபுரம் தேரிழந்தூர் குத்தாலம் பகுதிகளிலும் வழங்கப்பட்டது. மேலும், நீடூர் கங்கனம்புத்தூரில் ஒரு ஏழை குடும்பத்திற்கு புதிய வீடு கட்டி கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில், நகர, ஒன்றிய பொறுப்பாளர்களும், தமிழக வெற்றி கழக தொண்டர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.


