in

ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு முதியோர்களுக்கு இனிப்பு வழங்கினர்

ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு முதியோர்களுக்கு இனிப்பு வழங்கினர்

பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அருமை இல்லத்தில் முதியோர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சுதா இனிப்பு வழங்கி காலை உணவை பரிமாறினார்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்துள்ளது சோழம்பேட்டை. இங்கு முதியோர்களை பாதுகாக்கும் அருமை இல்லம் உள்ளது.

இன்று பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில், பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சுதா அருமை இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு இனிப்பு வழங்கி காலை உணவை பரிமாறினார்.

மேலும் துப்புரவு பணியாளர்களுக்கும் இனிப்பு வழங்கி புகைப்படம் எடுத்து கொண்டார். அவருடன் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், சீர்காழி முன்னாள் நகர மன்ற தலைவர் கணிவன்னன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

What do you think?

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

மகள் வீட்டில் இருக்கும் இயக்குனர் பாரதிராஜா