in

கோகூர் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி

கோகூர் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி

 

கோகூர் புனித அந்தோணியார் ஆலய மின் அலங்கார பெரிய தேர்பவனியில்
நூற்றுகணக்கான கிறிஸ்தவர்கள் சாம்பிராணி சட்டியை கையில் ஏந்தி நேர்த்தி கடன் செலுத்தினர்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் அருகே கோகூரில் பழைமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆண்டு பெருவிழா கடந்த ஜூன்.3-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருவிழா நாட்களில் தினமும் ஜெபம், வழிபாடு திருப்பலி, மரையுரை ஆகியவை நடைபெற்றது. ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய தேர் பவனி நடைபெற்றது.

இதனையொட்டி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சம்மனசு ,மாதா, அந்தோணியார் ஆகியோர் எழுந்தருளினர். நாகை மறை மாவட்ட அதிபர் பன்னீர்செல்வம், ஆலய பங்குத்தந்தை தேவசகாயம் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஆலய வளாகத்திலிருந்து துவங்கிய தேர் பவனி முக்கிய தெருக்கள் வழியே வலம் வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

இதில் பக்தர்கள் சாம்பிராணி சட்டியை கையில் ஏந்தியபடி நேர்த்தி கடன் செலுத்தினர். தேர் பவனி நிகழ்ச்சியில் நாகை, திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

ராஜா சாப் படத்தின் Teaser இணையத்தில் கசிவு

பழனி திருஆவினன்குடி கோயிலில் குடமுழுக்கு பணிகள் துவக்கம்