ஸ்ரீ சக்தி ரதத்தில் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் வருகை நிகழ்வு
நாமக்கல்லிற்கு ஸ்ரீ சக்தி ரதத்தில் வருகை புரிந்த – சமயபுரத்து மாரியம்மன் க்கு பக்தர்கள் தங்கள் கரங்களால் அபிஷேகம்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் சுப்பிரமணியபுரம் குறிக்கார கருப்பண்ண சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று இரவு ஸ்ரீ சக்தி ரதத்தில் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் வருகை நிகழ்வு நடைபெற்றது.
கோவில் சார்பாக வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.பின்னர் சக்தி ரதத்திலிருந்து குறிக்கார கருப்பண்ணசாமி ஆலய வளாகத்தில் உற்சவ சமயபுரத்து மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர் பக்தர்களால் அவரவர் திருக்கரங்களால் ஸ்ரீ சமயபுரத்து மாரியம்மன் க்கு பூ, திருமஞ்சள், பால், இளநீர், தேன் அரிசி மாவு, பன்னீர், என பலவித வாசனை திரவியம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்ச தீபம் உட்பட மகா தீபம் காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வினை குறிக்காற கருப்பண்ண சுவாமி ஆலய தர்மகர்த்தா முருகேசன் அபிஷேகம் செய்து துவங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட விசுவ இந்து பரிசத் மாவட்ட தலைவர் பழனிச்சாமி ரஞ்சித் குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சமயபுரத்து மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து பின்னர் சிறப்பு வழிபாடு செய்தனர்.
வருகை புரிந்த பக்தர்களுக்கு குறிக்காற கருப்பண்ண சுவாமி கோவில் ஆலயம் சார்பாக அன்னதான நிகழ்வு நடைபெற்றது.


