ஸ்ரீ ராமசுவாமி திருக்கோவிலில் ஸ்ரீ ராமசீதா திருக்கல்யாண மஹோத்ஸவம்
அருள்மிகு ஸ்ரீ ராமசுவாமி திருக்கோவிலில் ஸ்ரீ ராமசீதா திருக்கல்யாண மஹோத்ஸவம். திரளான பக்தா்கள் தாிசனம்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பழைமையான அருள்மிகு ராமஸ்வாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீராமா் சீதை மற்றும் லெட்சுமணனுடன் அருள்பாலிக்கின்றாா்.
வருடந்தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது. இத் திருக்கோயிலில் ஆண்டுதோறும் உலக நன்மைக்காகவும் பருவத்தே மழை பொழியவும் ஆவணி மாதம் ஸ்ரீராமசீதா திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம், அதன்படி ஆவணி 1ம்தேதி நவமி திதி ரோகிணி நட்சத்திரத்தில் ஸ்ரீராமசீதா திருக்கல்யாணஉற்சவம் இன்று வெகு விமா்சையாக நடைபெற்றது. இதற்காக இன்று காலை திருக்கோவில் நடை திறக்கப்பட்டு உற்சவா் விஷேச திருமஞ்சனம் நடைபெற்றது.
மாலையில் 51 வகை சீா்வாிசைகளுடன் மாப்பிள்ளை அழைப்பு திருவீதி உலா நடைபெற்றது. முன்னதாக கல்யாண மண்டபத்திற்கு ஸ்ரீசீதாதேவி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா்கள்.
திருமண சடங்குகள் ஆரம்பிக்கப்பட்டு முதலில் சங்கல்பம் நடைபெற்றது, அதனை தொடர்ந்து புண்யாகவாசனம் அங்குரார்ப்பணம் மாலைமாற்றுதல் மாப்பிள்ளை பெண்ணுக்கும் பாலால் கால் அலம்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் மாப்பிள்ளை பெண்ணுக்கு காப்பு கட்டும் வைபவம் நடைபெற்றது.
ஸ்ரீராமசந்திரமூா்த்திக்கும் ஸ்ரீசீதாதேவி தாயாருக்கும் புது வஸ்திரம் சாற்றறப்பட்டது. தொடா்ந்து கோத்திரம் கூறி பெண்ணை தாரை வாா்க்கும் நிகழ்வு நடைபெற்றது.

பக்தா்களின் ஸ்ரீராம் ஜெய்ராம் கோவிந்தா கோபாலா கோஷங்களுடன் திருமாங்கல்யதாரண நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து அக்னி வலம் வருதல் பொாியிடுதல் அட்சதை ஈடுதல் என மங்கல நிகழ்ச்சிகள் நடைபெற்று வாணரமாயிரம் பாடி நலுங்கு நடைபெற்றது.
நிறைவாக நட்சத்திர ஆரத்தி கும்ப ஆரத்தி மங்கல ஆரத்தி காண்பிக்கப்பட்டது. வந்திருந்த ஆயிரக்கணக்கான அனைத்து பக்தா்களுக்கு திருமாங்கல்ய சரடு, அட்சதை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.


