நாமக்கல் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் ஸ்ரீ மங்கல சண்டி மகா யாகம்
நாமக்கல் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் ஸ்ரீ மங்கல சண்டி மகா யாகம் ஏராளமானோர் பங்கேற்பு.

நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் நவராத்திரி விழா மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது.
விழாவின் கடைசி நாள் 11-ம் நாள் நிகழ்வாக நேற்று நவராத்திரி விழாவை முன்னிட்டு உலக நலன் வேண்டி ஸ்ரீ மங்கள சண்டி யாகம் மிக விமர்சையாக நடைபெற்றது.
அப்போது மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும், பின்னர் கோவில் வளாகம் முன் ஸ்ரீ மங்கள சண்டி யாகம் மிக விமர்சையாக நடைபெற்றது.
அப்போது மிகப் பெரிய குண்டங்கள் அமைக்கபட்டு யாக வேள்விகள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்று பின் பூர்ணாகதி மிக விமர்சையாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி மடாலய தலைவர் அண்ட் மேனேஜிங் டிரஸ்டி தாஸ் என்கின்ற P.தாசப்பன் மற்றும் நிர்வாகிகள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.


