in

 ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய பூச்சொரிதல் திருவிழா

 ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய பூச்சொரிதல் திருவிழா

 

காரைக்கால் அடுத்த அம்பகரத்தூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீபத்ரகாளியம்மன் தேவஸ்தானத்திற்குட்பட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய திருவிழா பூச்சொரிதல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.வரும் 19ம் தேதி தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.

காரைக்கால் அடுத்த அம்பகரத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்தின் திருவிழா பூச்சொரிதல் உற்சவத்துடன் துவங்கியது.

பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்திலிருந்து கரகம், மங்கள வாத்தியங்கள் முழங்க ஏராளமான பெண்கள்; பலவண்ண பூக்கள் கொண்ட தட்டுக்களுடன் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலாவாக வந்து மீண்டும் ஆலயம் அடைந்தனர்.

பின்னர் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்த பல வண்ண மலர்களால் மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட மலர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

விழாவில் ஆலய அறங்காவலர் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.வரும் 19ம் தேதி ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.

What do you think?

 ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா அர்ஜுனன் தபசு

நாட்டின் தலைவிதியை விஜய் கைகளில் கொடுக்க வேண்டுமா? பிரகாஷ் ராஜ் கேள்வி