ஸ்ரீ கங்கை அம்மன் 28-ஆம் ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழா திருக்கல்யாணம்
திண்டிவனம் முகிலம்மன் கோயில் தெரு ஸ்ரீ கங்கை அம்மன் 28-ஆம் ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மூங்கிலம்மன் கோயில் தெரு ஸ்ரீ கங்கை அம்மன் ஆலய 28-ஆம் ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழாவை திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மேலும் மூலவர் ஸ்ரீ கங்கை அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் ஆக பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ சிவபெருமான் மணமகனாக மற்றும் ஸ்ரீ கெங்கையம்மன் ஸ்ரீ பார்வதி தயாராக அலங்கரிக்கப்பட்டு மணமக்களாக பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
முன்னதாக தாம்பூலம் மற்றும் மங்களப் பொருட்கள் கொண்டு ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயத்திலிருந்து பக்தர்களால் கொண்டுவரப்பட்டன. மேலும் விநாயகர் பூஜைவுடன் இனிதே தொடங்கியது.
மேலும் திருக்கல்யாண நிகழ்வுகள் கால்நடும் வைபத்துடன் மற்றும் கலச பூஜை, காப்பு கட்டும் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீ பார்வதி தாயாருக்கு மங்கள நாண் அணிவிக்கும் வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து மூலவர் ஸ்ரீ கங்கை அம்மனுக்கு மங்களம் நான் அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது..தொடர்ந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஸ்ரீ பார்வதி தாயார் மற்றும் ஸ்ரீ சிவபெருமான் மணக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
தொடர்ந்து இரவு வீதி உலா நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஸ்ரீ RRS குடும்பத்தினர் செய்திருந்தனர்.