தூத்துக்குடி மாநகராட்சி சிவந்தா குளம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா
சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்
தூத்துக்குடி மாநகராட்சி சிவந்தா குளம் பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் கல்வியின் தரம் இட வசதி என அனைத்தும் ஒருங்கிணைந்து இருப்பதால் இங்கே ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர் .

அந்த வகையில் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த பள்ளிகளில் படித்து வருகிறார்கள் இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான இந்த பள்ளியின் விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.
தொடர்ந்து கலைத் திருவிழா போட்டியில் மாநில அளவில் கலந்து கொண்ட மாணவ மாணவியருக்கும் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கியும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி அஸ்மா யோகா போட்டியில் சர்வதேச அளவில் வெற்றி பெற்று வந்துள்ளார் .அந்த மாணவிக்கும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து மாணவ மாணவிகளின் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சியும் இதுபோல் சர்வதேச போட்டியில் கலந்து கொண்ட எட்டாம் வகுப்பு மாணவி அஸ்மாவின் யோகாசனமும் நடத்திக் காட்டப்பட்டது இதில் மாணவி அஸ்மா செய்து காட்டிய ஆசனங்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது இதைத்தொடர்ந்து கோலாட்டம் கரகாட்டம் என கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 21 தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி நடத்தப்பட்டு வருகிறது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவுப்படி இந்த பள்ளிகளில் தரமான கல்வியும் கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்ட காரணத்தால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இங்கு மாநகராட்சி பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள்.
இதன் காரணமாக ஐந்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருவதால் அந்த நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரவு உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
மேலும் இந்த பள்ளிகளுக்கு வேண்டிய அனைத்து சிறப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் முத்துமாரி மற்றும் பள்ளி ஆசிரியைகள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


