கங்கவராக நதீஸ்வரர் ஆலயம் கோயிலில் கார்த்திகை சோமவார பிரதோஷ சிறப்பு பூஜை
புதுச்சேரியின் புகழ் பெற்ற கங்கவராக நதீஸ்வரர் ஆலயம் கோயிலில் கார்த்திகை சோமவார பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது .
புதுச்சேரி வில்லியனூரை அடுத்துள்ள திருக்காஞ்சி கிராமத்தில்
காசியின் வீசம் பெற்ற சோழர்காலத்தில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காமாட்சி ஸ்ரீ மீனாட்சி ஸ்ரீ கங்கவராக நதீஸ்வரர் ஆலயம் உள்ளது.
சங்கராபரணி ஆற்று பகுதியில் உள்ள கெங்கை வராக நதீஸ்வரரை அகத்திய முனிவர் வழிபட்டதாக ஏடுகள் கூறுகின்றன.
இங்குள்ள சிவலிங்கத்திற்கும் கார்த்திகை மாத சோமாவற பிரதோஷ வழிபாடு நடைபெற்றது இதில் கங்கைவராக நதீஸ்வரருக்கு பால் தயிர் சந்தனம் விகுதி உள்ளிட்ட அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு தீப ஆராதனை நடைபெற்றது. .இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
பின்னர் கோயில் குருக்கள் சரவணன் கூறுகையில், “கார்த்திகை மாத சோமவார பிரசோதம் விஷேசமானது. கார்த்திகை மாத திங்கள்கிழமைகளில் சங்காபிஷேகம் சிவன் கோயில்களில் நடக்கும்.

108 சங்கினால் பூஜை, யாகம், அபிஷேகம் நடக்கும். மகாலட்சுமி அருள் , மனசந்தோஷம் கிடைக்கும். மன சஞ்சலம் இருப்போர் குழப்பம் தீரும். கடன் தொல்லை தீரும்.
அபிஷேக பொருட்கள் வாங்கி தந்தால் பலன் கிடைக்கும். சோமவார பிரதோசம் சிவனுக்கு மிக உகந்தது என்றார்.


