in

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் ஆலயத்தில் நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் ஆலயத்தில் நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.

 

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத பிரதோஷம் முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திருக்கயிலாயப் பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது.

இக்கோயில் குளத்தில் நீராடினால் சரும நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பாடல் பெற்ற தேவாரத் தலமான இக்கோவில் ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமி உட்பிரகார வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

What do you think?

லட்டு பிரசாத டோக்கன் வழங்க திருமலையில் உள்ள லட்டு கவுண்டரில் இயந்திரம் ஏற்பாடு.

நடிகர் சூர்யா அரசியலுக்கு வருகிறாரா..? வைரலாகும் போஸ்டர்