பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற கதலி நரசிங்க பெருமாள் கோவில் பைரவர் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றது…
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள அம்மையநாயக்கனூரில், சுயம்புலிங்க வடிவில் சிவனும், ஸ்ரீதேவி பூதேவி சமேத கதலி நரசிங்க பெருமாலும் ஒரே கருவறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் சுமார் 850 ஆண்டுகள் பழமையான உலகப் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் உள்ள பைரவர் சன்னதியில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியில் வரும் பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு காலபைரவருக்கு பால், மஞ்சள், தயிர், இளநீர் உட்பட 21 வகையான வாஸ்துகளால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றது.
இந்த பூஜையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பைரவரை வழிபட்டனர்.

இதன் மூலம் நவகிரக தோஷங்களும்,பயம் நீங்கி சகல நன்மைகள் பெருகும் என்பது நம்பிக்கை…. இப்பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாத வழங்கப்பட்டது….


