in

மகா சிவராத்தியை முன்னிட்டு லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

மகா சிவராத்தியை முன்னிட்டு லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

 

மகா சிவராத்தியை முன்னிட்டு லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை…..தாழம்பு வைத்து வழிபாடு…..

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து சாமி தரிசனம்…..

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலாகும்.

அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. சிவராத்திரியை முன்னிட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலைய அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாரை வழிபட்டனர்.

திருமால் மற்றும் பிரம்மன் ஆகிய இருவர்களில் யார் பெரியவர் என போட்டியிட்ட போது நான் என்ற அகந்தை அடங்கினாலன்றி சிவ பரம்பொருளை காண முடியாது என்ற உண்மையை உலகிற்கும், திருமால் மற்றும் பிரம்மனுக்கு உணர்த்தும் வகையில் தனது அடியையும், முடியையும் யார் கண்டு வருகிறீர்களோ அவரே பெரியவர் என சிவபொருமான் கூறினார்.

திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக்காணவும், பிரம்மன் அன்னபட்சியாக உருவெடுத்து முடியைக்காணவும் உயரப்பறந்து சென்றார். இருவரும் வெகு காலங்கள் தேடியும் அடியையும், முடியையும் காண முடியாமல் தோல்வி அடைந்து தங்களது அகந்தை நீங்கி சிவனை வணங்கி நின்ற போது சிவபொருமான் அடிமுடி காண இயலாத ஜோதிப்பிழம்பாக லிங்கோத்பவ மூர்த்தியாக காட்சி தந்தார். இந்த சிறப்பு வாய்ந்த மகா சிவ ராத்திரி உருவான இடம் திருவண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது.

 

மகா சிவராத்தியை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் உள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர், இளநீர், பஞ்சாமிரதம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் ஆராதனைகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சிவனுக்கு வைத்து வழிபடும் தாழம்பூவை வைத்து சிறப்பு தீப ஆராதனை நடைபெற்றது. இந்த சிவராத்திரி விழாவில் வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாரை தரிசனம் செய்து வழிபட்டனர்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

வடிவேலுவின் அலப்பறையான காதலர் தின வாழ்த்து வீடியோ வைரல் பிரபுதேவா-வடிவேலு ரிட்டர்ன்ஸ்!

அண்ணாமலையார் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்