in

சூரிக்கு மார்க்கெட் வேற லெவல்ல ஏறிடுச்சு


Watch – YouTube Click

சூரிக்கு மார்க்கெட் வேற லெவல்ல ஏறிடுச்சு

 

விடுதலை’, ‘கருடன்’ படங்களுக்கு அப்புறம் சூரிக்கு மார்க்கெட் வேற லெவல்ல ஏறிடுச்சு.

இப்போ அவர் முதல் முறையா ஒரு பெரிய பட்ஜெட் ஆக்ஷன் படத்துல நடிச்சிட்டு இருக்காரு.

மதிமாறன் புகழேந்தி இயக்குற இந்தப் படம் படகுப் பந்தயத்தை (Boat Racing) மையமா வச்சு உருவாகுது.

இந்தப் படத்துக்காக சூரி கடல்ல இறங்கி ரொம்ப கஷ்டப்பட்டு பயிற்சி எடுக்குறாராம். அந்த வீடியோவை அவரோட எக்ஸ் (Twitter) பக்கத்துல ஷேர் பண்ணி, “ரத்தம், வியர்வை, தளராத அர்ப்பணிப்போட ஒரு பயணம் போயிட்டு இருக்கு”ன்னு ரொம்ப எமோஷனலா சொல்லிருக்காரு.

சூரியோட கரியர்லயே இதுதான் ரொம்ப காஸ்ட்லியான படம். ₹75 கோடி செலவுல எல்ரட் குமாரோட ‘ஆர்.எஸ். இன்போ’ நிறுவனம் பிரம்மாண்டமா தயாரிக்குது.

தமிழ் மட்டும் இல்லாம தெலுங்கு, இந்தினு மூணு மொழிகள்ல (Pan-India) ரிலீஸ் ஆகப்போகுது.

இந்தப் படத்துல சத்யராஜ் சார் ஒரு முக்கியமான ரோல் பண்றாரு. அதுமட்டும் இல்லாம தெலுங்கு நடிகர் சுஹால் மற்றும் சாச்சனா நமிதாஸ்னு ஒரு பெரிய பட்டாளமே நடிக்குது.

ஜி.வி. பிரகாஷோட மியூசிக் படத்துக்கு ஒரு பெரிய பிளஸ்ஸா இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது.

சூரி காமெடி பண்ணி பார்த்த நமக்கு, இப்போ ஹீரோவா அவர் காட்டுற உழைப்பு ஆச்சரியமா இருக்குல?


Watch – YouTube Click Shorts

What do you think?

தைப்பூசம் திருவிழா நிகழ்வின் மூன்றாம் நாளில் முருகன் ஆலயத்தில் சாமியார் மீது மிளகாய் கரைசல் அபிஷேகம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது