in

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் மௌன அஞ்சலி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் மௌன அஞ்சலி

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு. மழையையும் பொருட்படுத்தாமல் அதிமுகவினர் குவிந்து மௌன அஞ்சலி.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சீர்காழி, சட்டநாதபுரம், மயிலாடுதுறை, தரங்கம்பாடி,குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 9-ம்ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ சந்திரமோகன், சக்தி, பாரதி, நகர பொறுப்பாளர் மார்கோனி உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர்கள், தொண்டர்கள் மலர்கள் தூவி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

அப்போது பரவலாக மழை பெய்த நிலையிலும் அதனை பொருட்படுத்தாமல் மௌன அஞ்சலி செலுத்தினர்.

பல்வேறு பகுதிகளிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

What do you think?

நெய்வேலி பள்ளியில் அறிவியல் கண்காட்சி மாவட்ட கல்வி அலுவலர் பங்கேற்பு

கல்யாணம் பத்தி இன்னும் கன்ஃபார்ம் ஆகாம, ஒரு சஸ்பென்ஸாவே இருக்கு