in

வள்ளலாரை வழிபட்ட சிலம்பரசன்

வள்ளலாரை வழிபட்ட சிலம்பரசன்

 

படத்தின் பெயர் வெளியாகும் நேரத்தில் வள்ளலாரை வழிபட்ட சிலம்பரசன்.

வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசன் கூட்டணியில் புதிய படத்தின் பெயர் இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நடிகர் சிலம்பரசன் கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் கோவிலில் தரிசனம் செய்தார்.

படத்தின் பெயர் வெளியாகும் அதே நேரத்தில் அவர் இங்கு தரிசனம் செய்து கொண்டிருந்தார்.

வள்ளலாரை வழிபட்ட அவர் அணையா அடுப்பு, தர்ம சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டார்.

இங்கு வழிபாடு செய்து கொண்டிருக்கும் போதே அந்த படத்தின் பெயர் ‘அரசன்’ என தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

What do you think?

தோரணமலையில் புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் கூட்டு பிரார்த்தனை

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்து