தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் 42 வது வணிகர் தினத்தை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட வணிக கடைகள் அடைப்பு ……
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வணிகர் தினத்தை முன்னிட்டும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 42வது வணிக கோரிக்கை மாநாடு நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன
அந்த வகையில் பாபநாசம் பகுதி முழுவதும் உள்ள மளிகை, ஜவுளிக்கடை, உணவகங்கள்,தேனீர் நிலையங்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட வணிக கடைகள் இன்று ஒரு நாள் மட்டும் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் மருந்து கடைகள், பால் விநியோகம் செய்யும் கடையில் வழக்கம்போல் செயல்படுகின்றன…