ஷில்பா ஷெட்டி போட்ட கேஸ் ? அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது!!???
பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி, தன்னோட பேரு, உருவம், போட்டோன்னு தனிப்பட்ட விஷயங்களை அவரோட அனுமதி இல்லாம சட்டவிரோதமா மத்தவங்க பயன்படுத்துறாங்கன்னு சொல்லி, மும்பை ஹைகோர்ட்ல ஒரு கேஸ் போட்டிருக்காங்க.
வக்கீல் மூலமா தாக்கல் செஞ்ச அந்த மனுவுல ஷில்பா ஷெட்டி என்ன சொல்லியிருக்காங்கன்னா: “என்னோட பேரு, என்னோட போட்டோ, என்னோட குரல், கையெழுத்துன்னு எல்லாமே என்னோட தனிப்பட்ட உரிமை (தனியுரிமை) சம்பந்தப்பட்டது.
இதெல்லாம் என்னோட பிரபலம் மூலமா வந்த விளம்பர உரிமைக்கு (Publicity Rights) ரொம்ப முக்கியம்.”
“யாரும், எந்த ஒரு ஆன்லைன் தளமும், ஷில்பா ஷெட்டியோட அடையாளத்தை மறைவா காசு பார்க்குறதுக்காக பயன்படுத்தக் கூடாது.”
“அதனால, என்னோட அனுமதி இல்லாம இப்படி என்னோட படங்களைப் பயன்படுத்துறதைத் தடுக்க கோர்ட் நடவடிக்கை எடுக்கணும்.
“அந்த மனுவுல, இந்த மாதிரி விதிமீறல்ல ஈடுபட்ட ஆன்லைன் வெப்சைட்டோட பெயர்கள் எல்லாம் இருக்குதாம்.இந்தக் கேஸ் சீக்கிரமே விசாரணைக்கு வரும்னு சொல்றாங்க. முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா, இதுக்கு முன்னாடியே மும்பை, டெல்லி ஹைகோர்ட்கள் இதே மாதிரி சில பிரபலங்களுக்கு அவங்க உரிமையைப் பாதுகாக்க சாதகமான தீர்ப்பு கொடுத்திருக்குதாம்.


