in

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

 

ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் 

ஆட்சியரகத்தில் திடீர் பரபரப்பு 

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு நாள் நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் உடைய மாவட்டத் தலைவர் பிரான்சிஸ் தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் குடியேறும் போராட்டம் ஆனது நடைபெற்றது.

வருவதை பார்க்க முடிகிறது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் குறிப்பாக ஊராட்சிகளில் பணிபுரியும் OHT ஆபரேட்டர்களுக்கு மாத சம்பளத்தை தேனி கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் வழங்குவது போல் அனைவருக்கும் வழங்க வேண்டும் ஊராட்சிகளில் பணிபுரியும் ஆப்பரேட்டர்கள் அனைவருக்கும் மோட்டார் இயக்குவதற்கான சிறப்பு படி ரூபாய் 200 வழங்க கோரியும் ஊராட்சிகளில் பணிபுரியும் OHT ஆப்ரேட்டர்கள் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு அட்டை உடனே வழங்க வேண்டியும்

நலவாரிய அட்டைகள் அனைவருக்கும் விரைவில் வழங்கக்கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தோழர்கள் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை சங்க உறுப்பினர்கள் பெண்கள் என 200க்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தற்போது குடியேறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் திடீரென 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

What do you think?

அரசு பேருந்து மோதி டைம் கீப்பர் ராமு என்பவர் உயிரிழந்தார்

இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன்