ஒன்றிய அரசை கண்டித்து மானூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்.
திண் டிவனம் அடுத்த மரக்காணம் மேற்கு ஒன்றியம் மானூர் மன்னார்சாமி கோயில் அருகே ஒன்றிய பாஜக என்.டி.ஏ அரசின் தவறான வெளியுறவு கொள்கையாலும், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததாலும் ஏற்பட்டுள்ள சமையல் எரி வாயுதட்டுப்பாட்டைகண்டித்தும், தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் என்.டி.ஏ மற்றும் அதன் கூட்டணியை கண்டித்தும் திமுக மதச்சார் பற்ற முற்போற்கு கூட்டணி சார்பில் ஒன்றிய செயலா ளர் ஒன்றிய துணை தலை வர் பழனி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் விசிக முன்னாள் மாவட்ட செய லாளர் சேரன் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போற்கு கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ், விசிக, தேமுதிக உள்ளிட்ட கட் சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

