எஸ். எஸ். ராஜமௌலியின் மகாபாரதம் Update
புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.எஸ். ராஜமௌலி, இந்து இதிகாசமான மகாபாரதத்தை பெரிய திரைக்கு கொண்டுவரும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.
ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ராஜமௌலி சமீபத்தில் படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.
இது பலரிடையே உற்சாகத்தைத் தூண்டியுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில், தெலுங்கு நட்சத்திரம் நானி இந்த படத்தில் நடிப்பது குறித்த வதந்தி பரவியது. நானியின் வரவிருக்கும் அதிரடித் திரைப்படமான HIT: The Third Case படத்திற்கான முன் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்றபோது ராஜமௌலி, நானி நிச்சயமாக அதில் ஒரு பகுதியாக இருக்கிறார் என்பதை மட்டும் தான் நான் இப்போது சொல்ல முடியும்,” என்றார்.
மேலும் “நான் மகாபாரதத்தை உருவாக்கும் நிலைக்கு வந்தால், மகாபாரதத்தின் பதிப்புகளைப் படிக்க எனக்கு ஒரு வருடம் ஆகும்.
10 பாகங்கள் கொண்ட படமாக இருக்கும் என்று ராஜமௌலி முன்பு கூறிஇருந்தார்.
பிரபல எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் மகாபாரதம் கதையை 3 பாகங்களாக உருவாக்கி வருவதாகவும் அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.