அமிதாபச்சன், ஆமிர் கானுக்கு சொந்தமான ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு பெங்களூருவில் ரூ.38 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது
மகாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்ட இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பெங்களூருவில் சாலை வரி செலுத்தாமல் பயன்படுத்தியதற்காக கோடீஸ்வரரான யூசுப் ஷெரிப், கேஜிஎஃப் பாபு, ஆகியோருக்கு போக்குவரத்து அதிகாரிகள் கிட்டத்தட்ட ரூ.40 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.
(MH 02-BB-0002) கார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனிடமிருந்தும், (MH11-AX-0001) நடிகர் ஆமிர் கானிடமிருந்தும் வாங்கப்பட்டது.
வழக்கின் விவரங்களின்படி, அமிதாப் பச்சனின் ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் காருக்கு ₹18.53 லட்சமும், ஆமிர் கானின் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்டுக்கு ₹19.73 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கார்கள் மகாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் யூசுப் ஷெரீப் உரிமையை தனது பெயருக்கு மாற்றாததால் இன்னும் இரண்டு நடிகர்களின் பெயர்களில் கார் இருக்கிறது.
இரு நடிகர்களும் பல ஆண்டுகளுக்கு முன்பே அவற்றை விற்றுவிட்டனர். அமிதாப்பின் பேண்டம் 2019 இல் விற்கப்பட்டது, அதே நேரத்தில் ஆமிரின் கோஸ்டின் விற்பனை தேதி தெளிவாக இல்லை.
இரு நடிகர்களுக்கும் இந்த விஷயத்தில் நேரடி தொடர்பு இல்லை, ஆனால் அவர்களின் பெயர்கள் தற்போது தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது ..
ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் கார் முதன்முதலில் 2021 ஆம் ஆண்டு வரி செலுத்தாததற்காகக் பிடிப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில், அந்த கார் பெங்களூரில் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே இருந்ததால், அபராதம் விதிக்கப்படவில்லை.
இருப்பினும், இரண்டு கார்களும் தற்போது நிர்ணயிக்கப்பட்ட ஒரு வருட காலத்திற்கு மேல் நகரத்தில் பயன்பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டதன் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


