in

ரோகிணி சிக்கிட்டாங்க! முத்துவின் மாஸ் பிளான்! தாலியை மீட்டது யார்? சிறகடிக்க ஆசையில் இன்று..!

Watch – YouTube Click

நம்ம ‘சிறகடிக்க ஆசை’ சீரியல்ல இப்போ விறுவிறுப்பு பஞ்சமே இல்லாம போயிட்டு இருக்கு! சீதாவோட காணாமல் போன தாலியை கண்டுபிடிக்க முத்துவும் மீனாவும் எடுத்த முயற்சிகள் அப்படியே ஒரு சினிமா படம் மாதிரியே இருந்துச்சுன்னு சொல்லலாம்.

தாலியைத் திருடிட்டு போன அந்தப் பெண்ணைப் பிடிக்க முத்துவும் மீனாவும் ஒரு அதிரடி பிளான் போட்டாங்க.

நகை உருக்குற இடத்துக்கு அந்தத் திருடி வருவான்னு தெரிஞ்சு, ரெண்டு பேரும் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறுவேஷம் போட்டுட்டு அங்க போனாங்க.

ஆனா, அங்க தான் ஒரு பெரிய ட்விஸ்ட்! அதே இடத்துக்கு வந்த போலீஸ், முத்து-மீனாவை நிஜமான திருடங்கன்னு நினைச்சு அரெஸ்ட் பண்ணிட்டாங்க!

அப்புறம் அண்ணாமலை, ரவி, ஸ்ருதினு எல்லாரும் போலீஸ் ஸ்டேஷன் போய் விளக்கம் கொடுத்து, ஒரு வழியா ரெண்டு பேரையும் ரிலீஸ் பண்ண வச்சாங்க.

ஜெயிலுக்குப் போனாலும் விடுறதா இல்லைன்னு முத்து மறுபடியும் அதே இடத்துக்கு மீனாவை கூட்டிட்டு போனாரு. அங்க அந்தத் திருடி வந்தப்போ, முத்து ஒரு செம புத்திசாலித்தனமான பிளான் போட்டாரு.

மீனாவை ‘சாமி வந்தது’ மாதிரி நடிக்க வச்சாரு! மீனாவோட அந்த உருவத்தைப் பார்த்து பயந்து போன அந்தத் திருடி, “சாமி குத்தம் ஆகிடும்”னு பயந்து தான் வச்சிருந்த தாலி உள்பட எல்லா நகைகளையும் ஒப்படைச்சுட்டா.

ஒரு வழியா சீதாவோட தாலி கிடைச்சிருச்சு!தாலியை மீட்ட கையோடு முத்து சும்மா இருக்கல, அந்தத் திருடியை அப்படியே வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாரு. எல்லாரும் முன்னாடியும் அவளோட உண்மை முகத்தை கிழிச்சாரு.

மீனாவை வீட்டை விட்டு துரத்த சாமியார் வேஷம் போட்டு வந்ததே இவதான்னு முத்து ஆதாரத்தோட நிரூபிச்சாரு. சரி, இவளை யாரு தூண்டி விட்டதுன்னு கேட்டப்போ, எல்லாரும் சிந்தாமணினு நினைச்சாங்க.

ஆனா, அந்தப் பெண் திடீர்னு ‘ரோகிணி’ பேரைச் சொன்னதும் மொத்த குடும்பமே அப்படியே ஷாக் ஆகி நிக்குது! ரோகிணி ஏன் இப்படி பண்ணாங்க? இவங்க பின்னாடி வேற யாரு இருக்கா?

இப்போ மொத்த வீடும் ரோகிணி மேல பயங்கர சந்தேகத்துல இருக்காங்க. முத்து-மீனா மீட்டெடுத்த தாலி ஒரு பக்கம் சந்தோஷத்தை கொடுத்தாலும், ரோகிணியோட சதி வெளிய வந்தது இப்போ கதையை வேற லெவலுக்கு கொண்டு போயிருக்கு!

இனி ரோகிணி எப்படித் தப்பிக்கப் போறாங்க? முத்து அவங்களை எப்படி வச்சு செய்யப்போறாருன்னு பார்க்க ரசிகர்கள் செம வெயிட்டிங்!

What do you think?

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் திரையரங்குகளில் திரையிட தடை…

விஜய்யை விளாசிய சமுத்திரக்கனி! வீடியோவால் கிளம்பிய புதுப் பஞ்சாயத்து! விமர்சனத்துக்கு அதிரடி பதில்.!