கட்டுமான பொருட்களின் கடுமையானவிலை ஏற்றத்த்தால் கட்டுப்படுத்த வேண்டும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை
கட்டுமான பொருட்களின் கடுமையானவிலை ஏற்றத்த்தால் கட்டுப்படுத்த வேண்டும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை
தமிழகத்தில் அதிகரித்து வரும் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தால் கட்டிட ஒப்பந்ததாரர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த தொழிலையே நம்பி இருக்கக்கூடிய கட்டுமான தொழிலாளர்களும் வேலை இழந்து வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கட்டுமான பொருட்கள் விலையை தமிழக அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். . தமிழ்நாடு அரசு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் மூலம் வழங்கிவரும் ஓய்வூதிய தொகை 1200-ல் இருந்து 3000 ஆக உயர்த்தி தர வேண்டும், உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவமனை முன்பாக உள்ள திடலில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட 300க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

சட்டமன்றத் தேர்தல் விரைவில் வர இருக்கிறது அதற்குள் எங்கள் கோரிக்கைகள் தமிழக முதல்வரின் கவனத்திற்கு செல்ல வேண்டும் ஏற்கனவே கட்டுமான தொழிலாளர்களின் நலன் கருதி பல நல்ல முடிவுகளை எடுத்துள்ள முதல்வர் இந்த பிரச்சனையையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என தெரிவித்தனர்.


