புதுவை மாநிலம் ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப்பள்ளி கலை விழா
புதுவை மாநிலம் ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் பிரசிடென்சி மேல்நிலைப்பள்ளி( எலைட்) மாணவ,மாணவிகள் மத்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலா உத்சவ் எனப்படும் கலை விழாவில் இந்த கல்வி ஆண்டிற்கான போட்டிகளில் பங்கு பெற்றனர்.
இதில் மண்டல, மாநில அளவில் தேர்வாகி 7 போட்டிப் பிரிவில் வெற்றி பெற்று தேசிய அளவில் பங்கு பெற்றனர். இதில் பாரம்பரிய பொம்மை செய்தல், குழு போட்டியில் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி மாணவன். திரு. சுமன்ராஜ் (9ஆம் வகுப்பு) செல்வி. ஸ்ரீமதி (9ஆம் வகுப்பு) ஆகியோர் முதல் பரிசினைப் பெற்று தங்க கோப்பையும், பாரம்பரிய கதை கூறல் குழு போட்டியில் பிரசிடென்சி பள்ளி (எலைட்) சார்பாக திரு. கிருபாவீர் (10ஆம் வகுப்பு) செல்வி. சஹானா (10ஆம் வகுப்பு) ஆகியோர் பங்கு பெற்று முதல் பரிசினைப் பெற்று தங்கக் கோப்பையும், குழு நடனப் போட்டியில் பிரசிடென்சி பள்ளி மாணவிகள் செல்வி.அனன்சிய அபிமதி (11ஆம் வகுப்பு) செல்வி. ஷாலினி (11ஆம் வகுப்பு) செல்வி.லக்ட்சனா (9ஆம் வகுப்பு) செல்வி.கனிஷ்கா (9ஆம் வகுப்பு) ஆகியோர்

இரண்டாம் பரிசினைப் பெற்று வெள்ளி கோப்பையையும் பெற்று சாதனை படைத்தனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் புதுச்சேரி கல்வி அமைச்சர் மாண்புமிகு. திரு. நமச்சிவாயம் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். புதுச்சேரிக்குப் பெருமை சேர்த்த பிரசிடென்சி மற்றும் பிரசிடென்சி (எலைட்) பள்ளி மாணவ, மாணவிகளைக் கல்வி அமைச்சர் வெகுவாகப் பாராட்டி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
மேலும் வெற்றி பெற உறுதுணையாக இருந்து மாணவ, மாணவிகளை ஊக்கமளித்த பள்ளி தாளாளர் டாக்டர் கே .பி.கிறிஷ்டிராஜ் அவர்களையும், பள்ளி முதல்வர் திருமதி.ஜெயந்தி ராணி அவர்களையும்,பள்ளி செயலாளர் திரு. கௌதம் அவர்களையும் கல்வி அமைச்சர் அவர்கள் மனமார பாராட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.


