தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு – ‘ரெட் அலர்ட்’
தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு – ‘ரெட் அலர்ட்’ – அதி கனமழை எச்சரிக்கை!
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோரத்தை நெருங்குவதால், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
இதன் காரணமாக, இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது.
இன்று 204.4 மி.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ள
1. விழுப்புரம்
2. கடலூர்
3. மயிலாடுதுறை
4. நாகப்பட்டினம்
5. திருவாரூர்
6. தஞ்சாவூர்
7. புதுக்கோட்டை
8. இராமநாதபுரம்
உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது:
ரெட் அலர்ட் தவிர, மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மற்ற பெரும்பாலான மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை
ஆகிய 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்ட மக்கள், அத்தியாவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்கவும், தாழ்வான பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும், அரசு அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.