இந்திய சினிமாவோட பட்ஜெட் கணக்கையே தலைகீழா மாற்றப்போகுது நிதேஷ் திவாரியின் ‘ராமாயணா’.
இதுவரைக்கும் நாம கேள்விப்படாத ஒரு பிரம்மாண்டத்தோட இந்தப் படம் உருவாகிட்டு இருக்கு! இந்தப் படம் ரெண்டு பாகங்களா வரப்போகுது.
அதுல ஆச்சரியமான விஷயம் என்னன்னா, முதல் பாகத்துக்கு ஒரு 2000 கோடி, இரண்டாம் பாகத்துக்கு ஒரு 2000 கோடின்னு மொத்தம் 4000 கோடி ரூபாய் பட்ஜெட்ல இந்தப் படம் தயாராகுது!
இந்திய சினிமா வரலாற்றுலயே இதுதான் இப்போதைக்கு ‘காஸ்ட்லி’யான படம்.இன்னைக்கு ஹனுமான் ஜெயந்திங்கிறதால, படக்குழு ஒரு மரண மாஸான அப்டேட்டை ரிலீஸ் பண்ணிருக்காங்க.
படத்துல ராமர் கேரக்டருக்கான ஒரு ஸ்பெஷல் டீசர் வீடியோ இப்போ வெளியாகி சோஷியல் மீடியாவை அதிர வைக்குது.
இந்த டீசர்ல வர்ற விஷுவல்ஸ் எல்லாம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிரட்டலா இருக்கு! ரன்பீர் கபூர் ராமரா எப்படி இருக்காருன்னு பார்க்கவே ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.ராமனாக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ்-ன்னு ஒரு பெரிய பட்டாளமே இதுல இருக்காங்க.
அதுவும் ஹனுமான் கேரக்டர்ல சன்னி தியோல் நடிக்கப்போறதா வர்ற தகவல் இன்னும் ஹைப்பை ஏத்திருக்கு! இந்த 4000 கோடி பிரம்மாண்டம் தியேட்டர்ல வரும்போது எப்படி இருக்கப்போகுது? இந்திய சினிமாவையே ஆட்டிப்படைக்கப்போகும் ‘ராமாயணா’! ஒரு ஸ்பெஷல் ட்ரீட்!

