ரஜினி கிஷன் நடிச்சு, அவரே தயாரிச்ச படம் தான் ‘ரஜினி கேங்’
ரஜினி கிஷன் நடிச்சு, அவரே தயாரிச்ச படம் தான் ‘ரஜினி கேங்’.
இந்த படத்துல திவிகா, முனீஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், கல்கி மாதிரியானவங்களும் நடிச்சிருக்காங்க. இந்தப் படத்தோட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில ரொம்ப கிராண்டா நடந்துச்சு.
இந்த விழாவுல படக்குழுவுல இருந்தவங்க எல்லாரும் கலந்துக்கிட்டு அவங்க அனுபவங்களைப் பத்தி பேசுனாங்க. அப்போ, ஹீரோவும் தயாரிப்பாளருமான ரஜினி கிஷன் என்ன பேசுனாருன்னா…
“ரஜினி கேங்”ங்கிறது எனக்கு மூணாவது படம். நான் ஏற்கனவே ரெண்டு படம் பண்ணிட்டேன். மக்கள் மனசுல ஒரு பெரிய ஹீரோவா இடம் பிடிக்கணும்ங்கிறது தான் என் ரொம்ப நாள் கனவு. அதனாலதான் நல்ல கதையா கேட்டுக்கிட்டு இருந்தேன்.
ரமேஷ் பாரதி சார் எனக்கு மூணு கதை சொன்னாரு. ஆனா அவரே, ‘நீங்க இந்தக் கதைய பண்ணுங்க, ஏன்னா காமெடி இப்போதைக்கு மக்களுக்கு ரொம்ப பிடிக்கும்’னு சொன்னாரு.
ஆரம்பத்துல, ‘நாமளே தயாரிச்சு, நடிக்கவும் வேணுமா?‘ன்னு யோசிச்சேன். அப்புறம், ‘நாமளே தயாரிச்சிடலாம்’னு முடிவு பண்ணி படத்தை ஆரம்பிச்சுட்டோம்.
படத்துல எல்லா பெரிய ஆர்ட்டிஸ்டுகளையும் கமிட் பண்ணிட்டோம். ஆனா எனக்கு மட்டும் ஹீரோயின் செட்டாகவே இல்லை.
நிறைய பேர அணுகினோம், யாருமே ஓகே சொல்லல. கடைசியிலதான் திவிகா வந்தாங்க. முனீஷ்காந்த் சார் என் நடிப்பைப் பார்த்துட்டுப் பாராட்டினாரு.
ஷூட்டிங் அப்போ கூல் சுரேஷ் வந்தாரு. அவர் வந்ததும் கூட்டம் கூடிடுச்சு. ரசிகர்கள் அவரைச் சுத்திட்டாங்க. அதனால கிட்டத்தட்ட மூணு மணி நேரம் ஷூட்டிங்கே நின்னு போச்சு.
அவருக்கு அவ்வளவு ஃபேன்ஸ் இருக்காங்க”ன்னு ரஜினி கிஷன் சொன்னாரு.
‘ரஜினி கேங்’ படத்தோட ட்ரெய்லரை விஷ்ணு விஷால் தான் ரிலீஸ் பண்ணினாரு. இந்தப் படம் சீக்கிரமே வெளிவரும்னு படக்குழு சொல்லியிருக்காங்க.


