மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ராதிகா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த நடிகை ராதிகா, திடீரென உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகை ராதிகா தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் நடித்து வருபவர் நடிப்பை தாண்டி சீரியல்களை தயாரித்தும் நடித்தும் வருகிறார்.
தற்பொழுது அரசியலிலும் நுழைந்துவிட்டார்.
இந்த நிலையில் ராதிகாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு டெங்கு இருப்பது கண்டறியப்பட்டு தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், 5 ஆம் தேதி வரை மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
ராதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


