in

புதுச்சேரியில் ஒரு மாற்றத்தை நோக்கி நல்ல ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் திரண்டு வாக்களித்து வருவதாகவும், நிச்சயமாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சியமைக்கும் என சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஒரு மாற்றத்தை நோக்கி நல்ல ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் திரண்டு வாக்களித்து வருவதாகவும், நிச்சயமாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சியமைக்கும் என சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், வில்லியனூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான இரா.

சிவா உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட இளங்கோ நகரில் உள்ள கூட்டுறவு சங்க கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புதுச்சேரி எதிர்கட்சி தலைவர் இரா. சிவா, ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில்
மக்கள் நூறு சதவீத வாக்களிக்க வேண்டும்.

புதுச்சேரியில் ஒரு மாற்றத்தை நோக்கி நல்ல ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் திரண்டு வாக்களித்து வருகின்றனர். நிச்சயமாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சியமைக்கும் என்றும், தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்ட பிரச்சாரம் மிகப்பெரிய மாற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகின்றனர்.திமுக தலைவரும் அதை வலியுறுத்து வருகிறார் என்று
கூறினார்.

What do you think?

ட்ரோல் பயம்? கமல் எடுத்த அதிரடி முடிவு! 50,000 ரூபாய் கட்டணம் வாபஸ்! தேர்தலை விட்டு விலகிய கமல்!

இது ராமாயணமா? இல்ல வீடியோ கேமா? AI குளறுபடி! தயாரிப்பாளர் கொடுத்த உறுதி! VFX சர்ச்சை!