வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளதாக திமுக மாநில அமைப்பாளர் சிவா தெரிவித்துள்ளார்
புதுச்சேரி இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி. அண்ணா சிலை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டு, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியை முழுமையாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக மாநில அமைப்பாளர் சிவா…
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி என்ற பெயரில் தேர்தல் ஆணையம் ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்டு வருகிறது திருத்த பணியை எதிர்த்து தமிழகத்தில் நீதிமன்றத்தை நாடி உள்ளது போல் புதுச்சேரியில் உள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பிலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.


