மோசமான சாலை காரணமாக அவதியுறும் பொதுமக்கள்.
மயிலாடுதுறை புறநகர் பகுதியான வள்ளலாகரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மோசமான சாலை காரணமாக அவதியுறும் பொதுமக்கள், சாலையை சீரமைக்க கோரிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் புறநகர் பகுதியான சேந்தங்குடி வள்ளலாகரம் ஊராட்சி விளங்கி வருகிறது. இந்த ஊராட்சி பகுதியில் கூட்டுறவு நகர், பாலாஜி நகர், வலம்புரி நகர், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகள் அமைத்துள்ளன.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ள இந்த ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சாலைகள் எதுவும் போடப்படவில்லை. இதன் காரணமாக சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. சிறிய அளவில் மழை பெய்தாலும் சாலைகள் சேரும் சகதியுமாக அதிகமாக மாறி வாகனங்கள் செல்ல முடியாத நிலைமை ஏற்படுகின்றது.
இதன் காரணமாக இப்பகுதியில் சென்று வந்த மினி பஸ் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலையில் பல்வேறு இருசக்கர விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் மனு கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ள குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் தொடர்ந்து சாலையை சீரமைக்காவிட்டால் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.