in

ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் பொதுமக்கள் பங்கேற்று மனு

ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் பொதுமக்கள் பங்கேற்று மனு

 

சிதம்பரம் அருகே லால்புரம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம். பொதுமக்கள் பங்கேற்று மனு அளித்தனர்.

உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதன் முதலாக சிதம்பரத்தில் துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முகாம்கள் நடைபெற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்று தீர்வு காணப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் ஊராட்சிக்கான உங்களுடன் ஸ்டாலின் சிறப்புத் திட்ட முகாம் வண்டிகேட் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிதம்பரம் தாசில்தார் கீதா தலைமை தாங்கினார்.

மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், பாலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில்
பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளரும். புவனகிரி ஒன்றிய அட்மா குழுத் தலைவருமான டாக்டர். மனோகர் பங்கேற்று குத்துவிளக்கேற்றி முகாமினை துவக்கி வைத்தார்.

இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று மகளிர் உரிமைத்தொகை வேண்டி விண்ணப்பம் அளித்தனர். மேலும் 13க்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் முகாம்களில் அமர்ந்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று தீர்வு கூறினர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தும் இந்த முகாம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும், முகாம்களுக்கு வந்து மனு அளித்தால் உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது எனக்கூறிய கிராமத்து மக்கள்,

எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் ஸ்டாலின் தலைமையிலான இந்த ஆட்சி தொடர வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்தனர்.

What do you think?

எந்த அடிப்படையில் எனக்கு விருது கொடுத்தாங்க….. நடுவர் குழுவை காட்டுகாட்ன்னு காட்டிய நடிகை ஊர்வசி

முகமது சிராஜுக்கு தெலுங்கானா போலீஸ் வாழ்த்து