நகராட்சி கடைகளை இடிக்கும் பணி பொதுமக்கள் கண்டனம்
மயிலாடுதுறை காந்தி பூங்காவில் அமைந்துள்ள நகராட்சி கடைகளை இடிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாழடைந்து போன காந்தி சிலை, மயிலாடுதுறையில் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில் நடவடிக்கை எடுக்காததற்கு பொதுமக்கள் கண்டனம்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மையப் பகுதியில், No2 காந்திஜி சாலையில் காந்தி பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் ஒருபுறத்தில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளும் மறுபுறத்தில் மகாத்மா காந்தியின் முழு திருஉருவ சிலை உள்ள சிறிய மண்டபமும் அமைந்துள்ளது.
கடைகள் சிதலமடைந்த காரணத்தால் அவற்றை இடித்து விட்டு மீண்டும் கட்டும் பணி நடைபெற்று வருகிறது இதற்காக கட்டிடங்கள் அனைத்தும் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட நிலையில், மகாத்மா காந்தி சிலை இருக்கும் சிறிய மண்டபம் மட்டும் புதர் மண்டி காணப்படுகிறது.
மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமதி சுதாவும், சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்குமாரும் பதவி வகித்து வரும் நிலையில், தேசப்பிதா காந்தியடிகள் சிலையை சுற்றி குப்பை கூலங்களுடன் சுகாதாரமற்று மீண்டும் கடைகள் கட்டப்பட்டு வரும் நிலையில் இந்த மண்டபத்தையும் புதுப்பித்து கட்ட வேண்டும் என்றும் காந்தி சிலையை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


