in

நாடார் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

நாடார் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

 

பெருந்தலைவர் காமராஜர் குறித்து தரம் தாழ்ந்து பேசிய திமுக எம்பி திருச்சி சிவாவை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மயிலாடுதுறையில் அனைத்து நாடார் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும் எம்பியுமான திருச்சி சிவா, பெருந்தலைவர் காமராஜர் பற்றி சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மயிலாடுதுறையில் அனைத்து நாடார் கூட்டமைப்பு மற்றும் மாயூரம் நாடார் உறவின்முறை தர்ம பரிபாலன சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற போராட்டத்தில் நாடார் கூட்டமைப்புகள், பெருந்தலைவர் காமராஜ் கக்கன் பேரவை ஆகியவற்றை சார்ந்த நிர்வாகிகள், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

காமராஜர் பற்றி தரக்குறைவாக பேசிய எம் பி சிவா அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், திமுக சார்பில் கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், திருச்சி சிவா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் முழக்கமிட்டனர்.

What do you think?

ஆதரவற்றவர் இறந்த நிலையில் தன் குடும்பத்தினர் போல் அவரை நல்லடக்கம் செய்த சமூக சேவகர்

ஒலக்கூர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 8-ம் ஆண்டு தேர் திருவிழா சிம்ம வாகனம்