in

ஜெபமாலைபுரம் குப்பை கிடங்க இடமாற்றம் செய்யக்கோரி போராட்டம்

ஜெபமாலைபுரம் குப்பை கிடங்க இடமாற்றம் செய்யக்கோரி போராட்டம்

 

தஞ்சாவூர் மாநகராட்சி ஜெபமாலைபுரம் குப்பை கிடங்க இடமாற்றம் செய்யக்கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கையெழுத்து இயக்க போராட்டம் நடந்தது.

தஞ்சாவூர் மாநகராட்சி ஜெபமாலைபுரம் குப்பை கிடங்கு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. மழை காரணமாக இந்த குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், கோடை காலங்கள் மற்றும் காற்று காலங்களில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு புகை மீட்டத்தினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு புகைமூட்டம் காரணமாக காரணமாக மூச்சுத் திணறல் மட்டுமின்றி உயிரிழப்பும் ஏற்பட்டு பல்வேறு நோய்த்தொற்றுக்கு ஆளாவதாகவும் உடனடியாக இந்த மாநகராட்சி குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில், தற்போது வரை இந்த குப்பை கிடங்கு வேறு இடத்திற்கு மாற்றாமல் நகரத்தின் மையப்பகுதியிலேயே உள்ளது.

இதனால் இதனை சுற்றி உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் குடும்பங்கள் , மண்டபங்கள் வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்டவை உள்ளன வரக்கூடிய மக்கள் அனைவருமே கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் உடனடியாக நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதன் துணை பொதுச் செயலாளர் ரெங்கசாமி தலைமையில் கையெழுத்து இயக்க போராட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் வீடு வீடாக சென்று பொது மக்களிடம் கையெழுத்து வாங்கி தமிழக முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்வதாகவும் தெரிவித்தனர்.

What do you think?

ஆஷாட நவராத்திரி வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம் பால்கோவா அலங்காரம்

3 நாட்களில் கண்ணப்பா செய்த வசூல்