in

10% கூடுதல் ஓய்வூதியம் வழங்கவும் கோரி தர்ணா

10% கூடுதல் ஓய்வூதியம் வழங்கவும் கோரி தர்ணா

 

70 வயது பூர்த்தியான ஓய்வூதியதாரர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்கவும் கோரி தர்ணா.

தமிழக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வு ஊதிய திட்டத்தில் குறைபாடுகளை களையவும், 70 வயது பூர்த்தியான ஓய்வூதியதாரர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்கவும் கோரி தர்ணா நடந்தது.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து அரசு துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நடந்த தர்ணாவில், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய், கிராம உதவியாளர், வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஊராட்சி உதவியாளர் ஆகியோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.7,850 வழங்கவும்,

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து அனைத்து ஓய்வூதியர்களுக்கும் முழுமையான மருத்துவ சிகிச்சை தொகை வழங்கவும்,

ஓய்வூதியத்திற்காக பிடித்தம் செய்யும் காலம் 15 ஆண்டுகளை 11 ஆண்டுகளாக குறைக்கவும் உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளை வலுயுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

What do you think?

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் மாசி பெரு விழா சுங்க வரி கட்டணம் வசூல் ஏலம்

மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த்